பாட்டையா என அழைப்பட்ட எழுத்தாளரும் நடிகருமான கே.கே.எஸ்.மணி, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதி புரத்தில் பிறந்தவர் கே.கே.எஸ்.மணி. நாடக நடிகர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட .இவருக்கு வயது 84.
இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்த இவர் பின்னர் திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தர்ர். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் இவர் ‘பாரதி’ மணி என அழைக்கப்பட்டார்.
ஒருத்தி, ஆட்டோகிராப், அந்நியன், பாபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மணி தனது அனுபவங்களை “புள்ளிகள், கோடுகள், கோலங்கள்” என புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். இலக்கிய உலகினரால் ‘பாட்டையா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார் பாரதி மணி.
வயது மூப்பின் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.