திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் இவரது மகன் வினோத்(23). திருச்சி சமயபுரம் அருகே உள்ள பொறியல் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்தார். இதே கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் மாணவி பானு வினோத்தின் இருசக்கர வாகனத்தில் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
தச்சஞ்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்த பொழுது சாலையில் அதிவேகமாக வந்த நெடுஞ்சாலை துறையின் அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் வினோத் உயிரிழந்தார்.
வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த மாணவி பானு தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடத்திக்கு வந்த சிறுகனூர் காவல்துறையினர் மாணவர் வினோத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.லால்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளரின் அரசு அரசு அதிகரிகள் விபத்துஅடைந்தவர்களை முதல் உதவி செய்ய கூட முன் வரவில்லை என்றும் 108 அவசர ஊர்தி கூட அழைக்கமால் நின்று கொண்டு இருந்தாக பொது மக்களும் சமுக ஆர்வலர் குற்றம்சாட்டி இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.