சென்னை திருவெற்றியூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணி கெட்டுப்போனதால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார்.
உணவங்களில் விற்கப்படும் உணவுகளில் பல்லி, கருப்பான் போன்ற பூச்சிகள் இருப்பதும், ஆன்லைனில் ஆடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கொட்டுப்போன உணவுகள் கிடைப்பது போன்ற சம்பவங்களை செய்திகளாக சமூக வலைத்தங்களில் காண முடிகிறது. இது குறித்த குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற ஒரு சம்பவம் சென்னை திருவெற்றியூரில் நிகழ்ந்துள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியில் வசிப்பவர் ஹரிஹரன். இவர் ஆன்லைன் மூலமாக, தனியார் சிக்கன் பிரியாணி கடையில், சிக்கன் பிரியாணியும், சிக்கன் லாலிபாப்பும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட அடுத்த போது கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. மேலும் சிக்கன் லாலிபப்பிலும் துர்நாற்றம் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஹரன், சம்பந்தப்பட்ட தனியார் அசைவ உணவகமான ss ஹைதராபாத் பிரியாணி என்ற உணவகத்தின் நிர்வாகத்திடம் நேரடியாக சென்று விளக்கம் கேட்டுள்ளார். நிர்வாகத்தினரும், வேறு பிரியாணி தருவதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்த ஹரிஹரன், இதுதொடர்பாக அருகில் உள்ள திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகே இதன் முழு விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.