மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் அங்காடிகள் கணிணி மயமாக்கப்பட்டு Bio-matric அடிப்படையில் பொருட்கள் விற்பனை இன்றுமுதல் துவக்கம்.
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறை மேலாண்மை திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக அனைத்து மத்திய சிறைகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதனை சென்னை சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள கட்டளை கண்காணிப்பு மையத்திலிருந்து (Command Control Center) கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளிலும் தனிச்சிறைகளிலும் செயல்பட்டு வரும் சிறைவாசிகள் அங்காடிகள் (PCP Canteen) முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டு (Bio-matric) அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை முதல்முறையாக கடந்த ஜூலை 03 ஆம் தேதி அன்று புழல் மத்தியசிறையில் சிறைத்துறை தலைமை இயக்குநர் அமரேஜ் புஜாரி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளிலும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிறைவாசிகள் தங்களுக்குத் தேவையான பேஸ்ட், பிரஷ் போன்ற அத்திவாசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை (Prisoner Cash Property Canteen) PCP- Canteen மூலமாக தங்களது விரல்ரேகையினை பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தினை மதுரை மத்தியசிறையிலும் பெண்கள் தனிச்சிறையிலும் நடைமுறைப்படுத்த தண்டனை சிறைவாசிகளின் விபரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் கடந்த ஒருவார காலமாக ஆய்வுசெய்யப்பட்டு இன்று முதல் முழுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) பரசுராமன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.
இதன்மூலம் சிறைவாசிகளின் சொந்த பணக்கணக்கு விபரங்கள் அனைத்தும் கணிணி மயமாக்கப்பட்டு சிறைவாசிகள் தங்களது கணக்கு விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளிலும் PCP Canteen மூலமாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஒரே வகையான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறைவாசிகள் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.