தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது…
“சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
அவருக்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கால்நடை மருத்துவம் பயின்று கொண்டிருக்கும் சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் இந்த ஆண்டு ஆசியப் போட்டிகளில் பெற்றுள்ள இரண்டாவது பதக்கம் ஆகும்.
உலக அரங்கில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நம் அனைவரையும் பெருமைப்படுத்த வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.