திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் 15 பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் சூழலில், திருநெல்வேலியில் காங்கிரஸுக்கு வெறும் 3 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட காங்கிரஸ் தரப்பு மிகுந்த அதிருப்தியில் உள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள்,15 பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.