வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணபரிவர்த்தனையில் ஈடுபட கூடாது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் பொதுத்துறை வங்கியில் 9ஆயிரம் கோடிவாங்கிய கடன் இன்னும் நிலுவையிலுள்ளது.
ஆனால் அதை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிவர்த்தனையை அவர் செய்தார். இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் அவா் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக பலமுறை சுப்ரீம் கோர்ட்டு வாய்ப்பளித்தது.
எனினும் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மாா்ச் 10-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி யுயு லலில் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை ஜூலை 11 ஆம் தேதி பட்டியலிட்டது.மேலும் தண்டனை விவரத்தை அறிவித்துள்ளது .