விறுவிறுப்பாக சென்றுகொண்டிக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில் பேசியிருக்கும் கமல்ஹாசன் “வார வாரம் விளையாட்டு மாறிக்கொண்டே உள்ளது என்று உள்ளே பேசிக் கொள்கிறார்கள். ஆனால் என்ன மாறுகிறது என்பதை பார்த்தோம் என்றால், கூட்டணிகள் தான் மாறுகிறது. புதிதாக சில நட்புகள் மலர்கிறது.
இது எங்கு கொண்டு போய் விடுமோ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், எல்லோரும் ஒரு பிளேட் மரியாதை கொடுங்கள் என கேட்டகிறார்கள். ஒரு பிளேட்லாம் கட்டுப்படி ஆகாது என கூறினால், அட்லீஸ்ட் ஒரு ஸ்பூனாவது கொடுங்கள் என சொல்கிறார்கள், அதாவது கிடைக்குதா இல்லையா என்பதை இன்றிரவு பார்ப்போம் என கூறியுள்ளார்.
தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கடந்த புதன்கிழமை நடந்த உன்னை போல் ஒருவன் டாஸ்க்கில் நடந்தது பற்றி ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் விவாதிக்கிறார். அதில், எதற்காக உங்கள் கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வியை கமல் கேட்கிறார்.
அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தை கொடுக்கிறார்கள். வழக்கம் போல விசித்ரா பேசி முடித்ததும் கைதட்டல்களும், விசில் சத்தமும் பறப்பதை பார்க்க முடிகிறது. இதனிடையே தற்போது இந்த வார எவிக்ஷன் நடைபெற உள்ள நிலையில், யார் அந்த போட்டியாளர் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
கடந்த வார எவிக்ஷனின் போது ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், ஏழாவது வாரமான இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். அதன்படி, இந்த வாரம் அக்ஷயா, விசித்ரா, ரவீனா, மணி சந்திரா, கானா பாலா, ஆர்ஜே பிராவோ, பூர்ணிமா மற்றும் விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். நாமினேட் செய்யப்பட்ட எட்டு பேரில், விசித்ரா அதிக வாக்குகளையும், அக்ஷயா, கானா பாலா மற்றும் விக்ரம் குறைந்த வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், டைட்டில் வின்னர் நான் தான் என சொல்லிக் கொண்டிருக்கும் விக்ரமும், வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸில் நுழைந்த போட்டியாளரான பிரபல பாடகர் கானா பாலாவும் அதல பாதாளத்தில் உள்ள நிலையில், இந்த வாரம் என்ன ட்விஸ்ட் நடக்கப் போகுது என தெரியவில்லை.
சரி எது என்னவோ…இது அதிகாரப்பூர்வமான தகவலா என்பதை நாளைய எபிசோட் வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.