பழனி திருஆவிதன் கோவிலில் மேளம் அடிப்பதில் கோவை மாவட்டதை சேர்ந்த இரு தரப்பினர் கற்கள் மற்றும் கட்டைகளை வைத்து மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த எட்டாம் தேதியுடன் தைப்பூசம் நிறைவு பெற்றது. இதற்காகத் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாசறை யாத்திரையாகப் பழனி வந்து சாமி தரிசனம் செய்த பிறகு பழனியில் உள்ள திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கோவை மற்றும் இடைப்பாடி ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குப் பக்தர்கள் வந்திருந்தன.
அப்போது கோவிலின் நுழைவாயில் அருகில் கோவையைச் சேர்ந்த ஒரு தரப்பு பக்தர்கள் மேகமடித்துக் கொண்டிருந்த பொழுது இடர்பாடி சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு பாதையாத்திரையாக மேளம் அடித்துக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் இருதரப்பினரும்” நீ மேளத்தை இசைக்காத.. நீ முதலில் நிறுத்து .. என வாக்குவாதத்தில் தொடங்கிக் கைகலப்பாக மாறி இருக்கிறது. இதில் இரு தரப்பினரும் அப்பகுதியில் இருந்த கற்கள் , கட்டைகள் மற்றும் தேங்காய்களைக் கொண்டு ஒருவரை ஒரு தாக்கியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் தியாய் பரவியது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடிவாரம் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் நடந்ததை கேட்டறிந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
பழனி முருகன் கோவிலில் மேளம் அடிப்பதில் இருதரப்பு பக்தர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.