கர்நாடகா மாநிலம் சிம்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் உருமாறிய ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று இதுவரை உலக அளவில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 34 நாடுகளில் பரவியுள்ளது.
அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த வாரத்திற்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 18 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஓமைக்ரான் தொற்று குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் முதன் முதலில் ஓமைக்ரான் கண்டறியப்பட்ட மாநிலமான கர்நாடகாவில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிம்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.