தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் திட்டம்!

tamil-nadu-local-body-election-2021
tamil nadu local body election 2021

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு வரும் நிலையில், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

tamil-nadu-local-body-election-2021
tamil nadu local body election 2021

அதைத்தொடர்ந்து ஜனவரி மூன்றாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Total
0
Shares
Related Posts