பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இந்துத்துவ அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பையே உலுக்கும் வகையில் பாபர் மசூதி நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று(டிச-6) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதி நிலத்தை இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தியும், நெல்லை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பஜார் திடல், குறிச்சி, மேலப்பாளையம் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.