சென்னையில் தினந்தோறும் மாநகராட்சி ஊழியர்களின் மூலம் 6150 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் சென்னை நொளம்பூர் ரோட்டரி கிளப் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்;
மெரினா கடற்கரையில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் மெரினா கடற்கரையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
தூய்மை பணிகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அந்த வகையில் தூய்மை பணிகளை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுவதன் மூலம் பொது மக்கள் தூய்மை பணிகளில் உள்ள சவால்களை புரிந்து கொள்ள முடிகிறது.
சென்னையில் தினந்தோறும் மாநகராட்சி ஊழியர்களின் மூலம் 6150 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் 62.5 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகளும்,
பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் 32.5 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகள் உள்ளது. அதில், இதுவரை 22 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளன.
நாம் ஒவ்வொருவரும் பொது வெளியில் உள்ள குப்பைகளை தன்னுடை குப்பைகள் தான் என்று எண்ணி அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.