சேலம் – விவசாயிகளின் நிலத்தை அமலாக துறையை (ED)பயன்படுத்தி அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சேலம் மாநகரம், அன்னதானப்பட்டி காவல் சரகம், நெத்திமேடு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி ஆகியோர், புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா ராமநாயக்கன் பாளையம் கிராமம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணன் கண்ணையன் ஆகியோரது 6.50 ஏக்கர் நிலத்தை பாஜக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் தனது பெயருக்கு போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை அபகரித்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு நிலத்தை கேட்டு விவசாயிகள் தர மறுத்ததால், காவல்துறை வருவாய்த்துறை அமலாக்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் பல்வேறு முறைகேடுகளை செய்து போலி பத்திரத்தை உருவாக்கி நிலத்தை அபகரிக்க குணசேகரன் போலி பத்திரம் தயார் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடியாட்களை கொண்டு நிலத்தில் உரிமையாளர்களான விவசாயிகளை கொலை மிரட்டல் செய்துள்ளனர் என்றும், இதுகுறித்து விவசாயிகள் காவல்துறையில் புகார் அளித்தும் பாஜக அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காதவாறு தடுத்துள்ளார் என்றும் தெரிவித்த அவர், பாஜக தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இது போன்ற இன்னும் ஏராளமான விவசாயிகள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்றும் தாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஆகவே தாங்கள் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி குணசேகர் அணையும் உடன் வந்து அவர்களது அடியாட்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா பேட்டி
சேலம் மாவட்டத்தில் ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தில், கிருஷ்ணன் கண்ணன் என்கிற பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகள். அவர்கள் இருவருக்கும் நிலம் 6 ஏக்கர் 50 சென்ட். அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட பாஜக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் விலைக்கு கேட்கிறார்,
விலைக்கு தர மறுக்கிறார்கள், அடிமாட்டு விலைக்கு கேட்டதால் தர மறுத்த விவசாயிகள் மீது நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு போலி பத்திரத்தை தயார் செய்து, அந்த நிலத்தை அபகரிக்கும் வேலையை செய்கிறார்கள். இதற்கு காவல்துறையும், அமலாக்க துறையும், வருவாய் துறையும் இணைந்து துணை போகிறார்கள்.
இதற்கு காரணம் பாஜகவின் அதிகார பலம் என்பது அத்துமீறப்பட்டு ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் சூழலை உருவாக்குகிறார்கள், அந்த நிலத்தில் எந்த விவசாயமும் செய்ய முடியாத அளவுக்கு அடியாட்களை கொண்டு கொலை மிரட்டல் செய்கிறார்கள்.
இந்தியா முழுவதும் தமிழ்நாடு முழுவதும் அமலாக்கத்துறை (ED), பாரதிய ஜனதா கட்சியின் ஏவல் துறையாக இருக்கிறது, பட்டியல் இன மக்களின் நிலத்தை அபகரிப்பதற்கு அமலாக்கத்துறை(ED) இயங்கியிருப்பது பட்டவர்த்ததனமாக வெளிப்பட்டுள்ளது.
இந்த போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது சம்பந்தப்பட்ட பாஜக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாய நிலத்தை முறையாக திருப்பித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வந்துள்ளோம். இதில் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்