நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்கக் மோடி அரசு தயங்குகிறது என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், மதுரையில் சி.பி.எம். சார்பில் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாகவும் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயளாலர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
மணிப்பூரில் 2 பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமை இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் 4ம் தேதி நடைபெற்ற சம்பவத்துக்கு இப்போதுதான் வெளியுலகிற்கு வந்துள்ளது.
இதை வெளியிடக்கூடாது என டுவிட்டர் நிறுவனத்துக்கு மோடி அரசு உத்தரவு போட்டு இருக்கிறதே தவிர.. 2 மாதமாக அந்த குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ஊடகத்தில் வெளி வந்த பிறகுதான் கைது செய்கிறார்கள். வெளி உலகத்திற்கு எதையும் சொல்லக் கூடாது என்றுதான் செயல்படுகிறார்கள்.
நாடாளுமன்ற கூட்டத்தில் இது தொடர்பாக விவாதம் செய்ய சொன்ன பொழுது.. இதை இப்போது விவாதிக்க தேவையில்லை.. நேரம் வரும் போது விசாரிப்போம் என்கிறார்கள்.. எல்லா அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு இதை விவாதிக்க கூடாது? இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே மோடி அரசு தயங்குகிறது. மோடியின் வெறுப்பு அரசியல்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அவர்களின் அரசியலுக்காக மக்களை மோத விடுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் நாளை முதல் பல்வேறு இடங்களில் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
மேலும்,மணிப்பூர் சம்பவத்துக்கு மத்திய பாஜக அரசு, மணிப்பூர் மாநில அரசும் முழு பொறுப்பேற்க வேண்டும். மணிப்பூரில் மாநில முதலமைச்சர் அங்கே ஆட்சி செய்ய அறுகதையற்றவர்.
விவாதம் நடத்தமலேயே நாடாளுமன்ற கூட்டம் முடிந்து விடுகிறது.. பாஜக அரசு அதைதான் விரும்புகிறது. பாஜக பாராளுமன்ற ஒத்திவைக்க இதை பகடைக் காயாக பயன்படுத்துகிறது. அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு ஏன் இதை விவாதிக்கக் கூடாது? இது காலம் தாழ்த்தும் முயற்சி.. இதை தான் எதிர்க் கட்சி கண்டிக்கிறது.