கொரோனோ பரவல் காரணமாகச் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் பொது முடக்கத்திற்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் சீனாவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.மேலும் ஷாங்காயில் இரண்டு மாதத்திற்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுவதால் சீனாவில் எரிபொருளின் தேவை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் சவூதி அரேபியாவும் ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் நிர்ணயம் செய்து மாற்று அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது.