கலிபோர்னியாவில் சாலையில் சிதறிக்கிடந்த பணம்..! – துள்ளிக்கொண்டு அள்ளிச்சென்ற மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியேகோ எனும் நகரில் இருந்து F D I C  எனும் காப்பீட்டு முகமைக்கு டிரக்கில் பணத்தை கொண்டு செல்லும் போது எதிர்பாரதவிதமாக டிரக்கின் பின்பகுதி கதவு திறந்ததால், பணக் கட்டுகள் அப்படியே காற்றில் பறந்து, சாலையில் சிதறின.

சாலையில் கொட்டிய பணத்தை அப்பகுதி மக்கள் அள்ளிச்சென்றனர் இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதற்கிடையே, பணத்தை அள்ளிச்சென்ற மக்கள் முறையாக மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை காவல்துறை எச்சரித்துள்ளது.2

அடுத்த 48 மணி நேரத்திற்குள் பணத்தை திரும்பி ஒப்படைக்காவிட்டால், சமூக ஊடகங்களில் சுற்றிவரும் வீடியோ ஆதராங்களைக் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts