உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது . இதற்காக அகமதாபாத் சென்றுள்ள இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது . இம்முறை இந்தியாவில் நடைபெறும் இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது .
அனல் பறக்க நடைபெற்று வரும் இந்த தொடரில் சனிக்கிழமையான நாளை நடைபெறும் 12 வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்ட உள்ளது . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
48 ஆண்டு கால ஒரு நாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .
பொதுவாக இந்த இரு அணிகள் மோதும் போட்டி என்றாலே அதில் பல வாக்குவாதங்கள் , போட்டிகள் , பொறாமைகள் , சண்டைகள் என ரசிகர்கள் மத்தியில் ஒரு போர் பதற்றம் நிலவும் அதுவும் இது உலககோப்பை என்பதால் இரு அணிகளும் மிகுந்த பாதுகாப்புக்கிடையே இந்த போட்டியில் விளையாட உள்ளது.
இதற்காக இன்று இரு அணிகளும் பலத்த பாதுகாப்புடை தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.