பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான Dangal படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சுஹானி பட்நாகர் தனது 19 ஆவது வயதில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்து உள்ளது.
பாலிவுட் திரையுலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கல் மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இப்படம்
பாலிவுட் சினிமாவில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது .
நடிகர் அமீர்கான் தயாரித்து நடித்த Dangal படத்தில் ஜூனியர் பபிதா போகத் கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் தான் நடிகை சுஹாசினி பட்நாகர் .
இந்த படத்தில் அவருக்கு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவருக்கு இப்படம் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்தது .
இந்நிலையில் 19 வயதாகும் நடிகை சுஹாசினி நேற்று உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஹாசினிக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் எடுத்த சிகிச்சைதான் அவரது மரணத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி இருந்தது .
இருப்பினும் சுஹாசினியின் குடும்பத்தினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது .
இந்நிலையில் சுஹாசினியின் இறப்பு குறித்து இணையத்தில் பல தகவல்கள் பரவி வர தற்போது அவரது குடும்பத்தினரிடம் இருந்து இருந்து சுஹாசினியின் இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த ‘தங்கல்’ பட நடிகை சுஹானி பட்நாகர் (19) Dermatomyositis என்று சொல்லப்படும் அரிய வகை தசை வீக்க நோயால் பாதிக்கப்பட்டு,
சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தந்தை புனித் பட்நாகர் தகவல் தெரிவித்துள்ளார் .
Also Read : https://itamiltv.com/chatur-firecracker-factory-accident-one-arrested/
2 மாதங்களுக்கு முன்பே 2 கைகளிலும் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்காக அவர் எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் பக்க விளைவாக
அவரின் நுரையீரலும் பாதிப்படைந்ததாக சுஹாசினியின் தந்தை தெரிவித்துள்ளார்
இந்நிலையில் இறந்த தனது மகளின் ஆத்மா சாந்தி ஆடிய அனைவரும் பிராத்திப்போம் என சுஹாசினியின் தந்தை கண்ணீர் மல்க தெரிய்வத்துள்ளார்.