ஆஸ்திரேலிய- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலககோப்பை தொடர் அரையிறுதிப் போட்டியில் புஷ்பா பாடலுக்கு நடனமாடிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின்(david warner) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் அபாரப் பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
https://x.com/vdjzen/status/1724111147815833797?s=20
இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி 14 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்திருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்(david warner) வழக்கம் போல புஷ்பா பாடலுக்கு நடனமாடினார்.
தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி…” டேவிட் வார்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.