டி-20 உலகக்கோப்பை அரை இறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டோய்னிஸ் – மேத்யூ வேட் கூட்டணி அதிரடியாக விளையாடி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களையும், ஃப்கர் ஜமான் 55 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் இருந்தே படுமோசமாக விளையாடியது. தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
அதன்பிறகு வந்த 28 ரன்களில், மிட்செல் மார்சும், 5 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் ,7 ரன்களில் கிளன் மேக்ஸ்வெல்லும் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை கொடுத்தனர்.
சரி இந்த போட்டியில் பாகிஸ்தான் தான் வெற்றி அடைய போகிறது என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்த பிறகுதான் ஸ்டோய்னிஸ் – மேத்யூ வேட் கூட்டணி சேர்ந்தனர்.
அவர்களின் சிறப்பான ஆட்டம் தோற்றுவிடும் என நினைத்த ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதீத நம்பிக்கையை கொடுத்தது. கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது, பாகிஸ்தான் அணியின் அதிரடி பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி 19வது ஓவரை வீசினார்.
யார் வந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என களத்தில் இருந்த ஸ்டோய்னிஸ் – மேத்யூ வேட் கூட்டணி பயமே இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி மேத்யூ வேட், ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி 19-வது ஓவரிலேயே போட்டியை முடித்து கொடுத்தனர்.
முன்னதாக, 30 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த போது, டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷ்வானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஆனால், டிவி ரீப்ளேவில் பந்தானது பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு அப்போது இரண்டு டி.ஆர்.எஸ் இருந்தது. அதாவது அம்பயரை எதிர்த்து மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யலாம்.
ஆனால், டேவிட் வார்னர் அப்படி எதுவும் கேட்காமல் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை ஆஸ்திரேலியா ஜெயிக்காமல் போயிருந்தால் கண்டிப்பாக இது சர்ச்சையாக வெடித்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.