பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு தொலைபேசியில் மிரட்டல் ( threat to pm ) விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ (NIA) அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
Also Read : முதுமலையில் யானைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது..!!
இந்தி மொழியில் கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர், குறிப்பிட்ட நேரத்திற்குள் இணைப்பை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர் .
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் புகாரில் கொலை மிரட்டல் குறித்து சைபர் கிரைம் ( threat to pm ) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.