Site icon ITamilTv

Defamation Case-”வழக்கை ரத்து செய்யக் கோரிய அண்ணாமலை..”நிராகரித்து நீதிமன்றம் அதிரடி!

Defamation Case

Defamation Case

Spread the love

Defamation Case-பாஜக தலைவர் அண்ணாமலை சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியிருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் .

அதில் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினர் இடையே வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில்,

இருப்பதாக கூறி சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: OPS Statement-”அதிமுக கூட்டணி..”அமித்ஷாவின் பெருந்தன்மைங்க..-ஓபிஎஸ் நெகிழ்ச்சி!

மேலும் பொய்யான் தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போது பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755537299516067872?s=20

அப்போது அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை(Defamation Case) சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர்

விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில்,

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

PUBLISHED BY : S.vidhya


Spread the love
Exit mobile version