delhi police : லட்சத்தீவுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செல்லுங்கள் என்று டெல்லி காவலரின் சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு 2 நாள் பயணமாக சென்றார். அப்போது அப்போது லட்சத்தீவு கடற்கரையில்,
ஸ்நோர்கெல்லிங் செய்வது போன்று எடுக்கப்பட்ட படங்களை தனது x பக்கத்தில் வெளியிட்டு,லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும்,
அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன்.
மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை உள்ளது .இந்த தீவு இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அமையும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில், மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர்,
பிரதமர் மோடியை ‘கோமாளி’,‘பொம்மை’ என்று சர்ச்சை பதிவை தங்களது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து இருந்தனர் .
இதற்கிடையில், பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து அந்நாட்டு அமைச்சர்களின் இழிவான கருத்துகள் குறித்து இந்தியா மாலத்தீவு அரசிடம் கேள்வி எழுப்பியது.
சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்த மூன்று அமைச்சர்களும் மாலத்தீவுகள் அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மிகவும் அழகான லட்சத்தீவுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செல்லுங்கள் என்ற கருத்துடன் டெல்லி காவலர் ஒருவர்,
சமூக வலைதளத்தில் லட்சத்தீவு கடற்கரை படத்தைப் பதிவு செய்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read : https://x.com/ITamilTVNews/status/1744955169895518593?s=20
இதுகுறித்து டெல்லி காவலரின் எக்ஸ் சமூக வலை தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நமது தீவு (லட்சத்தீவு) மிகவும் அழகானது மற்றும் நேர்த்தியானது.
மன அழுத்தத்துடன் வாகனம் ஓட்ட வேண்டாம். சரியான தூக்கப் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். ஓய்வு எடுங்கள்.
அழகான லட்சத்தீவுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செல்லுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும், டெல்லி போலீஸாரின் கருத்துக்கு லைக் போட்டுள்ளனர்.
மேலும் சிலர் டெல்லி போலீஸாரின்(delhi police) கருத்து, புகைப்படத்துக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.