டெல்லியில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு 15 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக (organs stolen) அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், சிறுமியின் குடும்பத்தினர் முதலில் சந்தேகத்திற்கு இடமின்றி உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் ஆனால், அதன் பின்னர் குடும்பத்தினர் காவல்துறையை அழைத்து சிறுமியின் உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் (organs stolen) என்று சந்தேகிக்கிப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, டெல்லி காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.
மேலும், சிறுமியின் பிரேதப் பரிசோதனை நேற்று நடைபெற்றது.
இச்சம்பவம் குறித்தான மருத்துவமனை அறிக்கையில், உயிரிழந்த சிறுமி ஜனவரி 21 அன்று, குடல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும், ஜனவரி 24 ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி ஜனவரி 26 ஆம் தேதி இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சம்மந்தப்பட்ட அந்த மருத்துவமனையில் உஸ்மான்பூர் காவல்துறையால் ஒரு மருத்துவ-சட்ட வழக்கு தயாரிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் உடலை அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், வைரலாக பரவி வருகிறது.
மேலும், பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு உண்மைகள் வெளிவரும் என்று சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.