‘மாமன்னன்’ உணர்ச்சிகரமானது” என நடிகர் தனுஷ் ட்விட் செய்துள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி(udhayanidhi) நடித்துள்ள மாமன்னன் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
உதயநிதி(udhayanidhi)மற்றும் கிருத்திகா உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் வரும் 29ம் தேதி ( நாளை ) திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்து பேசியது, ஏஞ்சல் பட தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு என கடந்த சில நாட்களாக இந்தப் படம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தப் படம் பார்த்த தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.அதில்,மாரி செல்வராஜின் மாமன்னன் படம் எமோஷன். வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் படத்துக்கு தேவையான சரியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பகத் மற்றும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடித்திருக்கிறார்கள். இடைவேளை காட்சியில் திரையரங்குகள் அதிர போகிறது. இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகு என குறிப்பிட்டுள்ளார்.
‘தனுஷ் உங்கள் ஆதரவு இல்லாமல் மாமன்னன் படம் நடந்திருக்காது’ எல்லாவற்றுக்கும் நன்றி என உதயநிதி ஸ்டாலின் தனுஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.