நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகனின் மிக பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது .
இந்த இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணியும் மோதின. இரு அணிகளும் என்றைக்கும் இல்லாமல் அன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது .
ஆனால் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது . இதனால் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
நிறைய சோகம் , நிறைய வலிகள் , நிறைய மகிழ்ச்சி , என அனைத்தும் அந்த இறுதி போட்டியின்போது நம்மால் பார்க்க முடிந்தது . எப்போதும் கூலாக இருக்கும் தோனியே சற்று எமோஷனல் ஆகிவிட்டார் . அந்த வீடியோக்களும் , புகைப்படங்களும் இன்று வரை வைரலாக வலம் வருகிறது .இந்த மகத்தான வெற்றியை சென்னை வீரர்கள் , ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடினர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதை அந்த அணியின் வீரர்கள் பஸ் மற்றும் ஓய்வு அறையில் ஆடல் பாடலுடன் கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோவும் வழக்கம் போல் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…