அமைச்சர் உதயநிதி (Minister Udayanidhi) வேண்டுகோளுக்கு பிறகே முதல்வர் ஸ்டாலின் ரொக்கத்தொகை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில், ரூ 1000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு இன்று விநியோகம் செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், இந்த ரொக்கத்தொகை வழங்குவதற்கு முக்கிய காரணமே உதயநிதி ஸ்டாலின் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்க : https://itamiltv.com/madurai-jallikattu-bookings-open-for-players-and-bulls/
முன்னதாக தமிழக அரசு சார்பில் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் (Minister Udayanidhi) பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரொக்கத்தொகை வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அப்போது பதிலளித்த அவர், ரொக்கத்தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என பதிலளித்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டதாகவும், அமைச்சர் உதயநிதி வேண்டுகோளுக்கு பிறகே முதல்வர் ஸ்டாலின் ரொக்கத்தொகை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதாகவும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.