சென்னையில் 200 வார்டுகளில் உள்ள 163 இடங்களில் திமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ.., இந்திய கம்யூ.., மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இதையடுத்து சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வார்டுகள் ஒதுக்கீடு குறித்து கடந்த சில நாட்களாக திமுக தலைமையுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 163 இடங்களில் திமுக போட்டியிடும் என கூறப்படுகிறது.
இவற்றில் மீதம் உள்ள 37 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் – 17, விசிக – 6, மார்க்சிஸ்ட் கம்யூ., -5, இந்திய கம்யூ -3, மதிமுக – 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, மமக 1 என வார்டுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.