மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டு ஆளுங்கட்சி திமுக கவுன்சிலர் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தன் கணவருடன் கரும்பு வெட்ட கூலிக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேரப்பட்டு ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் தான் திமுக உறுப்பினர் ராணி. இவருடைய கணவர் செல்லன். இவர்களது குடும்பம் இரண்டு தலைமுறைகளாக திமுக கட்சியிலிருந்து வந்துள்ளனர்.
குறிப்பாக உத்தபுரம் இரண்டாவது வார்டு சாது நாயக்கன்பட்டி, பொட்டல் பட்டி, நல்ல தாது நாயகன் பட்டி, பச்சைப்பட்டி, உள்ளடக்கிய திமுக தேர்தல் வேட்பாளராகப் போட்டியிட்டு அதிமுக, ஆமா முக வேட்பாளர்களை விட 480 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நிலையில் நேர்மையான குடும்பத்தில் பிறந்த தானே தனது சொத்துக்களை வைத்துத் தான் தேர்தலில் நின்றதாகவும்,மேலும் அவர்கள் வசிக்கும் இல்லம் தனியார் வங்கியில் கடனுக்காக அடைமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும், வட்டிக்குப் பணம் வாங்கியதால் இதனைத் திருப்பித் தர முடியாது நிலையில் உள்ளதாகவும் உறுப்பினர் ராணி தெரிவித்துள்ளார்.
மேலும் ராணி செல்லம் இருந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன முதல் மகளுக்குத் திருமணமான நிலையில் இரண்டு பிள்ளைகள் தற்போது பள்ளியில் படித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவு மற்றும் இதுர செலவுகள் மட்டுமில்லாமல் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் குடும்ப பொருளாதாரத்தை நிலை நிறுத்த இருவரும் கூலி வேலைக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அங்கு ஒருத்தருக்கு 200 ரூபாய் இருவரும் ஒரு நாளைக்கு 400 ரூபாய் என குடும்பத்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், இவர்கள் ஏழ்மை நிலையிலிருந்த போது இவர்கள் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் ஓட்டளித்ததாகத் தெரிவித்தனர்.
ஆனால் இவர்களே வறுமையில் வாடி வருவதால் எங்களின் கோரிக்கைகளை அவர்களிடம் சொல்ல முடியாமல் தவிப்பதாகவும் அப்பாவுக்குப் பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மேலும் இந்த தம்பதிகளுக்கு அப்பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.ராணி செல்லம் தம்பதியினர் ஒரு காலத்தில் நல்ல நிலைமையிலிருந்ததாகவும் தற்பொழுது இவர்களுக்கு முதலமைச்சர் உதவ வேண்டும் என்று தெரிவித்தனர்