DMK Election Manifesto | திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று சென்னை மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலையொட்டி,திமுக கட்சி சார்பில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சென்னையில் இரண்டாம் நாளாக முகாமிட்டுள்ளனர்.
இன்று காலை சிறப்பு அழைப்பாளர்களையும், பிற்பகலில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பரிந்துரைகளை பெறுகின்றனர்.
இந்த நிகழ்வில் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.,
இதையும் படிங்க: PMTN | இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி. திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் அளிக்கப்பட்டு,
தொலைபேசி வாயிலாக 18,000க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 2,500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4,000க்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762357026729148605?s=20
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை(DMK Election Manifesto)அனுப்பியுள்ளனர்.
முன்னதாக பிப்ரவரி 5ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள், பிப்ரவரி 6ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7ம் தேதி
மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், பிப்ரவரி 9ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், பிப்ரவரி 10ம் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில்
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், பிப்ரவரி 11ம் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள். அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 23ம் தேதி காலையில் வேலூர், இராணிப்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டங்கள், பிற்பகலில் திருவண்ணாமலை மாவட்டம், 26ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்துப் பரிந்துரைகளை பெற்றனர்.