ஓவிய பயிலரங்க தொடக்க விழாவில் காவி வண்ணத்தை எடுக்க மறுத்து நீல வண்ணத்தை எடுத்து கனிமொழி(Kanimozhi) ஓவியம் வரைந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மேற்கு கோட்டை பூங்காவில் குருவனம் மற்றும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் இயற்கை வண்ண ஓவிய பயிலரங்கம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதற்குத் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு ஓவியம் வரைந்து பயிலரங்கம் ஒன்றைத் தொடங்கி வைத்தார்.முன்னதாக ஓவியம் வரையும் பலகை முன்பு பல வகையான பெயிண்ட் வைக்கப்பட்டு இருந்தது.அப்போது சபாநாயகர் அப்பாவு ஆரஞ்சு நிற பெயிண்டை எடுத்து கனிமொழியிடம் வழங்கினார்.
அப்போது கனிமொழி எடுத்தவுடனே ”ஆரஞ்சு நிற வண்ணத்தை கொடுக்கிறீர்களே” என சிரித்தபடி கூறினார். தொடர்ந்து பேசிய கனிமொழி அந்த வண்ணமே பார்ப்பதற்குக் காவி நிறத்தைப் போல் உள்ளது என எனக் கூறியதும் அங்குக் கூடியிருந்த நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது . தற்பொழுது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ.ராஜா, ஒன்றிய கழகச் செயலாளர் திரு. கே.வி.பெரியரை, கல்லூரி முதல்வர் திரு. ஹரிகெங்காரம், ஆங்கிலத்துறைத் தலைவர் திரு. வெ.ராமபாரதி, இயற்பியல்துறைத் தலைவர் திரு. மு.சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.