vijay politics –2026 சட்டசபை தேர்தலில் விஜயின் அரசியல் வருகை என்பது நிச்சயமாக திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
தொடர்ந்து தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் பதிவு செய்தனர்.
விஜயின் அரசியல் வருகை பற்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்துக்களையும், தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Meketatu case- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!
இந்த நிலையில் ,நேற்று டெல்லியில் சென்று சென்னை விமான நிலையம் திரும்பிய திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு,’ நமது நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துமக்கள் தான்.
அந்த பெரும்பான்மையை பயன்படுத்தி கொண்டு அரசியல் செய்வோர் தான் அதற்கு எதிரானவர்கள், திமுக அரசு யாராக இருந்தாலும் எந்த பாகுபாடும் பார்த்து செயல்பட்டதில்லை.
அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும், ஊழலுக்கு எதிரான அரசியல் என்று தான நாம் எல்லோரும் சொல்லி கொண்டு இருக்கிறோம். ஜனநாயகதில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் .
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1753672905102422136?s=20
2026 சட்டசபை தேர்தலில் விஜயின் அரசியல் வருகை என்பது நிச்சயமாக திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
யாருடைய அரசியல் வருகையையும் எப்படி இருக்கும் என ஆருடம் சொல்லும் நிலையில் நான் இல்லை. அரசியல் களத்திற்கு வர வேண்டும் என வந்துள்ளார்.
அவர் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது என கூறினார் திமுக எம்பி கனிமொழி.
முன்னதாக விஜய் (vijay politics) தான் வெளியிட்ட முதல் அரசியல் அறிக்கையில்,ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால்,
நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம்,
என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன என குறிப்பிட்டு இருந்தார்.