Meketatu case-மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர, தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல்:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர, தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Rice Price-அரசு இதுவரை தும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ..-ராமதாஸ் காட்டம்!
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
டெல்லியில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தமிழகத்துக்கு செய்யப்படும் துரோகமாகும். தமிழகத்துக்கு இதுவரை திறக்க வேண்டிய பாக்கியுள்ள 90 டிஎம்சி நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத ஆணையம்,
கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று மேகேதாட்டு அணை கட்டுமானத்துக்கான வரைவு அறிக்கைக்கு வாக்கெடுப்பு நடத்தி,
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1753648031034179866?s=20
மத்திய நீர் ஆணையத்துக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் கூட்ட முடிவில், 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
இதைக்கொண்டு தமிழகத்தின் குடிநீர் தேவையை எப்படி ஈடுசெய்ய முடியும். கருகும் பயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும். எனவே தமிழக அரசு நமக்குரிய தண்ணீரை கேட்டும்,
மேகேதாட்டு அணைக்கான வரைவு அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
மேலும் மேகேதாட்டு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று ( Meketatu case )விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.