இன்று, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், அதில், பங்கேற்ற திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் கே சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவவருமான கலைஞர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாழி முன்னிட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர்.
இந்த பேரணியானது அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கி, வாலாஜா சாலை வழியாக சென்று, மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கலைஞர் சமாதியை நோக்கி இந்த அமைதி பேரணி, சென்று கொண்டிருந்த போது சென்னை மாநகராட்சி 146ஆவது வார்டு திமுக கவுன்சிலரான ஆலப்பாக்கம் கே. சண்முகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைப் பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று நடைபெற்ற அமைதி பேரணியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதனால் தற்போது சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.