தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ( RB Udhayakumar ) ஆட்சிக்கு வந்த பின் காற்றில் பறக்க விட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது :
யார் என்ன சொன்னாலும் அதிமுக எதற்கும் அஞ்சாது எங்கள் தரப்பிலும் பலமான கூட்டணிகள் உள்ளது
எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற பாஜகவிடம் தேர்தல் வியூகம் என ஏதுவுமில்லை .மக்களை ஈர்க்கக்கூடிய விளம்பர வெளிச்சத்தில் தான் மத்திய அரசும், மாநில அரசும் உள்ளது.
விவசாயிகளையும், பொது மக்களையும் வஞ்சித்து ஏமாற்றுகிற கண்துடைப்பு வேலைகளை தான் மாநில அரசும், மத்திய அரசும் தினம் தினம் செய்துவருகிறது;
நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வது தான் அதிமுக தொண்டர்களின் ஒரே இலக்கு அதற்கான வேளைகளில் தற்போது மும்மரமாகி ஈடுபட்டு வருகிறோம்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளது . விலைவாசியை உயர்த்திவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து ‘நீங்கள் நலமா?’ என்று கேட்டால் எப்படி நியாயமாக இருக்கும்.
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை பெறுவதற்கு திமுகவுக்கு தைரியம் இல்லை . மக்களுக்கு ( RB Udhayakumar ) தேவையான நிதியை வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் மனமில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.