சித்தார்த் நடிப்பில் உருவான ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘மிஸ் யூ’ .
மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கனாத்துடன் சேர்ந்து ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடித்துள்ளனர்.
Also Read : டிச. 17, 18 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
இப்படம் நேற்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது . அதன்படி மிஸ் யூ படம் முதல் நாளில் உலகளவில் ₹40 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.