உபியில் சமவாஜ் கட்சி எம்.எல்.ஏ. தரமற்ற முறையில் மிகவும் மோசமான நிலையில்,கட்டப்பட்டுள்ள வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார்.தற்பொழுது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் படிக்கும் படிக்கும் கல்வி நிறுவனங்களோ, வேலை பார்க்கும் தொழிற்சாலைகளோ எதுவாக இருந்தாலும் உறுதியான கட்டிடத்தில் இயங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்த நிலையில் சிலரது தரமற்ற செயல்களின் காரணமாக இதுதொடர்பாக அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் ஏற்படுகின்றனர்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மோசமான தரத்தில் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரின் ராணிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ டாக்டர் ஆர்.கே. வர்மா அங்கு கட்டப்பட்டு வரும் மாநில பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்வதற்காக நேற்றைய தினம் சென்றுள்ளார். அப்போது அரசு பொறியியல் கல்லூரியின் விடுதி மற்றும் குடியிருப்பு வளாகத்தின் சுவரை உறுதித்தன்மையை சோதனை செய்வதற்காக கையால் தள்ளினார்.
ये कैसा निर्माण है सरकार जो सपा विधायक @DrRKVermamla2 के हाथ लगाने से ही ध्वस्त हो जा रहा है , सरकार के संरक्षण में भ्रष्टाचार का स्पष्ट प्रमाण है यह जीर्ण शीर्ण सरकारी निर्माण pic.twitter.com/7VhFiLeuCO
— Smt Juhie Singh (@juhiesingh) June 24, 2022
ஆனால் எம்.எல்.ஏ. தள்ளியதில் கட்டுமான சுவரின் ஒரு பகுதி மொத்தமாக கீழே விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கல்லூரி கட்டுமானத்தில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும் குடியிருப்பாளர்களுக்காக ஒரு கல்லறை தயாராகி வருவதாகவும் ஆர்.கே.வர்மா கூறினார்.
இதுபோன்ற தரமற்ற கட்டுமானப் பணிகளால் இளைஞர்களின் எதிர்காலத்தை அரசாங்கம் தயார் செய்யாமல் மரணத்திற்கு வழி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் லட்சணம் இதுதான் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் .