தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடர் போராட்டங்கள் மற்றும் சம்பவத்தால் உயிரிழப்புகள்போன்ற வன்முறை நடைபெற்றதால் வழக்கு தொடரப்பட்டு தற்பொழுது அந்த ஆலை மூடப்பட்டுள்ளது.
அதை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்திய நிலையில், தற்காலிகமாக ஆலையில் உற்பத்தி தொடங்க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்தி வந்த நிலையில், ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ,ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஆலையை வாங்குவதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில், வேதாந்தா குழுமத்தின் பங்கு விலை 9 சதவீதம் வரை சரிவு மற்றும் ஆலை செயல்படாமல் முடங்கி இருப்பதற்கும் இந்த முடிவை தேர்ந்தெடுத்தாக வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.