இந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் அட்லீ உருவக்கேலி குறித்து மாஸாக பதில் கொடுத்துள்ள வீடியோ தற்போது செம வைரலாக வலம் வருகிறது.
திரைத்துறையில் இருக்கும் முன்னணி இளம் இயக்குநர்கள் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ . இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளையும் படைத்தது.
இதையடுத்து இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படமே பேபி ஜான். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் தான் ஹிந்தியில் தேறி என ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கி உள்ளது.
Also Read : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல்…!!
அதன்படி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குநர் அட்லீ பிரபல தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டார் அப்போது . முதல் முறையாக ஒரு ஸ்டாரை நீங்கள் சந்திக்கும் போது அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா? என இயக்குநர் அட்லீயிடம் கிண்டலாக தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த அட்லீ கூறியதாவது :
நான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; ஏனெனில் அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தார்; அவர் என்னுடைய ஸ்கிரிப்ட்டை மட்டுமே கேட்டார்; என்னுடைய தோற்றத்தை அவர் பார்க்கவில்லை; நான் கதை சொன்ன விதம் அவருக்கு பிடித்திருந்தது.
இந்த உலகமும் இப்படித்தான் ஒருவரை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்; யாரையும் அவர்களது தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது; அவர்களின் உள்ளத்தை வைத்து மதிப்பிட வேண்டும் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.