இன்று முதல் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து லட்சக் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைக்கிறார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70 முதல் 80 கிராமங்களுக்கும் மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.