போக்குவரத்து நெரிசலை குறைக்குமா பறக்கும் சாலை?

Double-decker-six-lane-flyover-Will-reduce-traffic-congestion
Double decker six lane flyove rWill reduce traffic congestion

இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதத்தில் நிறைவடைந்த பின், சாலைப்பணிகள் தொடங்கும் என்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரவாயல்-துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆறு வழிச்சாலைகளில் எங்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Double-decker-six-lane-flyover-Will-reduce-traffic-congestion
Double decker six lane flyover Will reduce traffic congestion

இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்லும் என்றும், அதில் கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 வழிச்சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அணுகு சாலை உள்ளிட்ட புதிய கருத்துக்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் மூன்று மாதத்தில் முடிக்கப்பட உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts