தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வெள்ளம் தொடர்பான பாதிப்புகளால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக் மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கணிசமான மழைப் பெய்துள்ளது. இந்நிலையில் பருவமழை பாதிப்புகள் தொடர்பாக பேரிடர் மீட்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது
அதன் படி ஜூன் 1ம் முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 274 குடிசைகள் பகுதியளவிலும் 47 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 122 வீடுகள் பகுதியளவிலும் 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.