நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று 100 பேர் படகில் பயணம் மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியானவர்கள் அண்டை நகரில் விவசாய பணிக்காக படகில் பயணம் செய்தனர் என்றுதெரியவந்துள்ளது .
நைஜர் ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
அதையடுத்து, இந்த விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் சிக்கித்தவித்த 30 பேரை உயிருடன் மீட்டனர்.
ஆனால், இந்த படகு விபத்தில் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த படகு விபத்தில் பலர் மாயமான நிலையில் பாலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து நீரை மூழ்கி மாயமானவர்களை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.