2020-ல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொருள்களைக் கடத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் தினமும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.
புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தும் கும்பல் கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதை பொருட்களையோ சட்டத்திற்கு புறம்பாக கடத்தி விற்பனை செய்து வருகிறது. இதனால் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவிற்கு அடிமையாகியுள்ளனர். உலகம் முழுவதும் இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருத்தமளிக்கிறது.
இது போன்று சட்டத்திற்கு புறம்பாக போதை பொருட்களை பயன்படுத்துதல், போதைப் பொருள்களைக் கடத்தல், போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் போதை தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் 2020-ல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பவுடர் ரவி, சின்னத்துரை, பாம்பு நாகராஜ், ஆகிய 3 பேருக்கும் 12 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள் உத்தரவிட்டுள்ளார்.