நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உதவும் தண்டால் (push ups) உடற்பயிற்சியினை விதவிதமான முறையில் எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம்.
உதாரணத்திற்கு, தந்தை தன்னுடைய மகளை முதுகில் ஏற்றிக்கொண்டு தண்டால் (push ups) எடுப்பது, அதிக அளவு எடைகளை முதுகில் சுமந்து கொண்டு தண்டால் எடுப்பது போன்ற பல்வேறு விதமான தண்டால் உடற்பயிற்சியை பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தண்டால் எடுக்கும் வீடியோ ஒன்று இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குடிபோதையில் போதை தலைக்கேறிய நபர் ஒருவர் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருக்கும் உயரமான ஒரு பெயர் பலகையின் மீது ஏறி தண்டால் எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
பெயர் பலகைகளின் மீது ஏறி தண்டால் எடுக்கும் அந்த நபரை வீடியோ எடுத்த இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் அதனை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒன்பது முறை அசால்டாக தண்டால் எடுக்கும் அந்த நபர், அதன் பிறகு மிகவும் களைப்பாகி அப்படியே அந்த பெயர் பலகையின் மீது படுத்து கொள்கிறார். மேலும், அங்கிருந்து கீழே விழுந்து விடுவாரோ என்ற அச்சம் பார்ப்பவர்ளை பதைபதைக்க வைக்கிறது.
மேலும், அந்த வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இந்த நபரின் செயலை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து சிறிது நேரத்திற்கு அங்கேயே நின்று விட்டனர். சம்பளப்பூரி மகானி என்ற ஒருவர் தான் இந்த வீடியோவை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அதிக அளவு லோக்கல் மதுபானங்களை குடித்தால் இப்படித்தான்” என்ற வாசகங்களையும் அந்த வீடியோவின் கீழ் சேர்த்துள்ளார்.
அவர் பதிவிட்ட இந்த வீடியோவிற்கு இன்ஸ்டாகிராம் யூசர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.