Dubai floating in flood : நேற்று ஏப்ரல் (16-04-24) துபாயில் பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை கடல் போல் காட்சியளித்தது.
இதனால், சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் வெகுவாக தடைபட்டன. துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் வெள்ள நீர் புகுந்தது.
மேலும், துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தண்ணீர் புகுந்ததால் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது.
ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவின்படி 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான் – ராமதாஸ்!
ஐ.நா.வும் இதுகுறித்து கூறுகையில், துபாயின் ஓராண்டு பெய்யக்கூடிய மொத்த சராசரி மழையளவு ஒரேநாளில் பெய்துள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த பெருமழைக்குக் காரணம் அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற மிகப் பெரிய புயல் தான் என்றும், இந்த புயல் தற்போது ஓமன் வளைகுடாவில் நிலைகொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் ஓமன் மற்றும் தென் கிழக்கு ஈரானிலும் வழக்கத்துக்கு மாறான மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இன்றும் (17-04-24) ஆங்காங்கே லேசான மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், துபாயில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாறு காணாத கனமழையால் 18 பேர் பலியாகியுள்ளனர். இந்த புயல் பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் இந்த புயல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் ஓமனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இருவரை காணவில்லை.
இதனிடையே, இன்று துபாய், ஷார்ஜாவில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது Dubai floating in flood.
இதையும் படிங்க : கார்த்தி சிதம்பரம் மனைவி மீது வழக்கு பதிவு..!