தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மிக மோசமான காற்று மாசு பதிவாகியுள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி பட்டாசுகளை வெடித்து தள்ளியுள்ளனர்.
இதன் காரணமாக சென்னையில் மட்டும் 19,600 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் . இதுவரை 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னையில் மிக மோசமான அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது .
101-200 என்ற அளவு மிதமான காற்று மாசு என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மணலியில் அதிகபட்சமாக 316ஆகப் பதிவாகியுள்ளது.
வேளச்சேரி-301, அரும்பாக்கத்தில்-260, ஆலந்தூர்-254, ராயபுரம்-227, கொடுங்கையூரில்-129, கும்மிடிப்பூண்டி-241, வேலூரில்-230, கடலூரில்-213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.