ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பச்சமில்லாமல் நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழையின் காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் விளையாட்டின் விதிமுறைப்படி இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை எட்டி பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மொத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களுக்கு முன்னேறு அணிகள் இறுதி சுற்றை அடையும் .
இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 3-வது லீக் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று மல்லுக்கட்டியது . கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.
இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் சரியாக 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியபோது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற இஷான் கிஷன் மற்றும் ஹர்டிக் பொறுப்புடன் ஆடி அணிக்கு தேவையான ரன்களை மெல்ல மெல்ல சேகரித்தனர் .
இறுதி வரை இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 87 எடுத்தனர்.
இதனையடுத்து 267ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பொது இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே அந்த போட்டி ரசிகர்களின் ஆரவாரத்துடன் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் அதிலும் இது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் இப்போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மழையின் காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.