தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின்(durga stalin) கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு 32 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெருமாள் கோயிலாக இந்த குருவாயூரப்பன் திருக்கோயில் உள்ளது.
புராணக் கதைகளின் படி இந்த சிலையைச் சிற்பி வடிப்பதற்கு முன்பாகவே விஷ்ணு பகவான் இதன் வடிவ படத்தைப் பிரம்மனிடம் வழங்கியதாகவும் அந்த படத்தைப் பிரம்மன் மன்னர் சுதாபஸ் மற்றும் அவரது மனைவி பிரஸ்னியிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
துர்கா ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மட்டும் அல்லாது திருப்பதி உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்.
அந்த வகையில் குருவாயூர் கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் தங்க கிரீடம், சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார். இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.